புதிய தகவல்கள்
நாடார் நவீன மெகா சுயம்வரம் நிகழ்ச்சி 2019 ஆடித்திங்கள் 13ம் நாள் (28.07.2019) ஞாயிற்றுக்கிழமை கோயம்புத்தூர், துடியலூர், வடமதுரையில் அமைந்த்துள்ள ஸ்ரீ ஸ்ரீ ஆனந்தம் திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. அதே சமயம் நமது நாடார் சமுதாயாப் பெருமக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தமைக்கு நன்றி . இதுவரையில் நமது திருமணத் தகவல் பரிமாற்றத்தின் மூலம் 6240 திருமணங்கள் இனிதே நடந்தேறியுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறோம்.நன்றி மீண்டும் வருக
மேலும் விபரங்களுக்கு அலுவலகத்தை அணுகவும்.
தொடர்பு எண் : +91 422 420 0514, +91 96 29 23 1533
இந்து நாடார் திருமணத்தகவல் பரிமாற்றம்
கோவை அறக்கட்டளை
இந்து நாடார் திருமணத் தகவல் பரிமாற்றம் 6.09.2004 ல் தேவையின் அடிப்படையில் 4 பேர் கொண்ட ஒரு சிறிய குழுவாக சமுதாய சேவைக்காக ஆரம்பிக்கப்பட்டது.
ஆரம்பகாலத்தில் மாத கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில் பெற்றோர்கள் கலந்துரையாடல் கூட்ட மூலமாக வரன்கள் தகவல் பரிமாற்றம் செய்யப்பட்டது.
பின் 2005 ல் இதற்கென ஒரு அலுவலகம் திறந்து, அன்றாட அலுவலக சேவையாக செயல்பட்டு வந்துள்ளது. இந்த சேவை தமிழ்நாடு முழுவதும் பரவியதால் இதற்கென ஒரு அறக்கட்டளை 07.02.2011 அன்று பதிவு செய்யப்பட்டது. இதனால் சேவை மேலும் விரிவுபடுத்தப்பட்டது. அலுவலக சேவையுடன், மாத கடைசி ஞாயிறு அன்று மாதாந்திர பெற்றோர்கள் கூட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. இதனால் மேலும் அதிகமாக பயன் அடைகிறார்கள்.
மேலும் இந்து நாடார் திருமணத் தகவல் பரிமாற்றம் ஆரம்பித்து 13 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு சென்ற 13-08-2017 ல் கோவை துடியலூர் K.வடமதுரை யில் உள்ள ஸ்ரீஸ்ரீ ஆனந்தம் திருமண மண்டபத்தில் நவீன மெகா சுயம்வரம் நிகழ்ச்சி மிக சிறப்பான முறையில் நடைபெற்றது. அதில் 5920 பேர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.
இந்த வருடமும் 29-07-2019 அன்று அதே மண்டபத்தில் அதைவிட மிகச் சிறப்பான முறையில் நவீன மெகா சுயம்வர நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
மேலும் இந்த முறை வரன்களின் தகவல்களை நவீன முறையில் அமைக்கப்பட்ட LED திரையில் காண்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அது சமயம் நமது நாடார் சமுதாயப் பெருமக்கள் தங்கள் வரன்களுடன் கலந்து கொண்டு தங்களது பிள்ளைகளுக்குப் பிடித்தமான, பொருத்தமான வரன்களைத் தேர்வு செய்து பெரும் பயன்பெருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.